காதல் வயப்பட்ட காமுகன்
- தமிழ் குரங்கு
- Feb 20, 2024
- 1 min read
Updated: Feb 29, 2024
காதல் வயப்பட்ட காமுகன்
நூற்பது நானாகினால் நூலிழையும்
நுகருமடி நுன் வாசம்!!
கோர்பது கையாகினால் கோதையும் பாடுவாள்
பாவை மொழி பாநூறு!!
மணப்பது நீயாகினால் மங்கையே
மரணம் வரை மறவாமல் மகிழ்விப்பேன் உனை!!
கடிப்பது உன் கழுத்தாகினால் கழுத்திற்கும்
இடுவேன் மாங்கனி மாலை!!
இடிப்பது உன் இடையாகினால்
இனியவளே இளமை காலம் இருநூறு வேண்டும்!!
பார்பது உன் கண்ணாகினால் பாவையே உன்
பார்வையில் ஆயிரம் ஜாலம் வேண்டும்!!
கழிப்பது உன்னோடு என்றால் கலி
முடியும்வரை காத்திருப்பேன் உனக்காக!!
உயிர்ப்பது உனக்காக என்றால் ஊழியில்
உயிரென்ற ஓர் இடம் ஒதுக்கி வை எனக்காக!!
அழிவது உடல் என்றால் அழியாதது
அன்பெனும் ஆன்மா!! ஆட்டுவித்த
உனக்காக ஊசலாடும்!!
- தமிழ் குரங்கு
Comments