காதல் கரைந்தது
- தமிழ் குரங்கு
- Mar 16, 2024
- 1 min read
காதல் கரைந்தது
காதலின் கடைசி மணித்துளி காதருகே
ஒலித்தபோது கலங்கிய கண்கள்
கண்முன்னே கானல்நீராய் !! காதலும்
கரை ஒதுங்கியதே!!
பிரிவின் வலிகொடியது என பிரியாத
இரண்டு பிளவுகள் பிரிந்தபோது
பிதற்றிய நினைவுகள் புதியதே!!
மனம்நோகும் நள்ளிரவில் மயில்பாடும்
மயக்கத்தில் மக்களோ மயங்கி நிற்க
மனக்குறை தாளாத மலர்மன்னனோ
மங்கையின் கிறக்கத்தில் மனம் வாடி நின்றான்!!
பூவாத பூவொன்று பூத்ததுவும் ஒருநாளில்
காணாத காட்சி ஒன்றும் கருவுறுத்தவும் ஒரு இரவில்!!
உயிரென்ற ஓவியத்தை உருக்கியதை நானறிவேன்
உணர்வென்ற உதிரத்தை உறிஞ்சிய உறவுகளை
உலுக்காதா உண்மையினை உருவேற்றிட
உருகாத நாளில்லையே!!
- தமிழ் குரங்கு
Comments