கணவன் மனைவி - காதல் மொழி
- தமிழ் குரங்கு
- Feb 20, 2024
- 1 min read
Updated: Feb 29, 2024
கணவன் மனைவி - காதல் மொழி
பெண் : உயிரே!!
ஆண் : உணர்வே!!
பெண் : கண்ணிமையாய் காவலாய் கசிந்துருகியவறே!!
ஆண் : அன்பிற்கினியவளே !! ஆருயிர் தோழியே!!
பெண் : பெண்ணுக்கு பிறந்தவனே!! பெருமைபட உயர்ந்தவனே!!
ஆண் : உள்ளத்தில் இருப்பவளே!! உயிர்குடுத்த உத்தமியே!!
பெண் : கன்னத்துக்கு குழி அழகா!! கருமை நிற பேரழகா!!
ஆண் : அன்னத்து அறிவழகி!! அத்தை பெத்த பெண்ணழகி!!
பெண் : அரவணைக்கும் ஆருயிரே!! ஆண்மையின் பேரூயிரே!!
ஆண் : கனியென கண்ணின் மணியென மண்ணில் மாயும் வரை மறப்பெனா உன்னை!!
பெண் : வழியென !! வாழ்க்கை துணையென விழியாய் விண்ணதிர
விரும்பியவனே!!
ஆண் : பெண் என்ற குலத்தில் பேய் என்ற போர்வையை பொய் என புகழுரைத்த பெருமை பேரழகி உன்னையே உரித்தாக்கும்.
பெண் : பெண்ணாக பிறப்பெடுக்க !! பிறர்மனை நோக்கா பிறழாத
பீமனை கையணைக்க !! காணாத கடந்தவம் செய்து காத்திருக்கும்
கன்னியர்களோ ஏராளம் !! உனைக் காண.
- தமிழ் குரங்கு
Comments