பென்சில் - பெண்
- தமிழ் குரங்கு
- Feb 20, 2024
- 1 min read
Updated: Feb 29, 2024
பென்சில் - பெண்
தீட்டாத தீப்பிழம்புகள் இல்லை
தீராதது உன் உடல் இல்லை
தீயாக காய்ந்து தீர!! தீர!! உதிர்த்தது என்னவோ
உணர்வு தான் !!
பிறந்தது முதல் உரித்து உரித்து உவமையாக்கி
பறித்து பறித்து பதுமையாக்கினாலும்
பகலில் மிளிர்வாய் !! இரவில் ஒளிர்வாய் !!
காய காய !! தேய தேய !!
ஒளிர்ந்து ஒடிந்து தேய்ந்து தேய்ந்து !!
வாழ்க்கையும் வயதும் வாடிப்போக
திருவியில் உருவிய வாழ்க்கையும் வாய்ப்புகளும்
என்றொரு நாள் தீராத்தான் போகுது!!
துச்சாதனன் துச்ச எண்ணம் கூட துளிர்விடாமல்
இருக்க துகில் உரித்த கண்ணணின்
கருமை ஓவியம் நீயோ!!
அழித்தாலும் அணையாத கற்பினுக்குரியவள் நீயோ!!
- தமிழ் குரங்கு
Comments