top of page

சந்தேகம்

  • Writer: தமிழ் குரங்கு
    தமிழ் குரங்கு
  • Mar 7, 2024
  • 1 min read


சந்தேகம்


சந்தேகம் எனும் சாம்பிராணி புகைத்துவிட்டால்

சந்தோசம் எனும் சங்கு சரண்டராகிவிடும் !!

வந்த நேரம் வழக்கில்லையே என

வாதிட்டால் வந்தோர் மனம் வறண்டு விடும் !!

போன நேரம் பார்பதில்லையே !! போர் புரியும்

பெண்கள் மனம் !! வாழ்த்திட தான்

வாராதோ பெண்கள் குணம்!!


வாசல்படியில் கால்வைத்தால் வந்த வழி போயிடத்தான்

வாயார வர்ணித்திடும் வறுமை குணம் !!

பேயாட போகிறாள் என பெரும்பித்தன்

தன்சித்தம் சிதைந்து சிலாகிக்கும் சிலமணிகள்

மணம் கசக்கும் மனப்பிறழ்வுகள்!!


மழை ஓய்ந்த மண்ணில் மனசுடைந்த வேளையில்

உடை களைய உள்நுழைந்தால்

ஊர்நிகழ்வு உரைத்துதான் உசுப்பேத்தும்

உணர்வுகள் தான் உச்சமோ!!


நெஞ்சம் ஏனோ!! நிம்மதியை தேடி அலைய

தஞ்சம் புகுந்த வீட்டில் தணியாதோ!!

இந்த சந்தேகப் பேரலை!!


சந்திக்காத நிகழ்வு வேண்டும்

சந்தேகம் எனும் சாத்தானை!!

நிந்திக்காத நிம்மதி வேண்டும்

நிஜமெனும் நித்தியத்தை நிலைகொண்டு!!

                                                

- தமிழ் குரங்கு

Comments


bottom of page