top of page

முருகா!!

  • Writer: தமிழ் குரங்கு
    தமிழ் குரங்கு
  • Feb 20, 2024
  • 1 min read

Updated: Feb 29, 2024


முருகா!!


காற்றின் மொழி கூட கதைப்பதென்ன??

கதிர்காம கதிர்வேலா!! என கசிந்துருகி

கரைவதே!!


வேலா!! என வேண்டுவதை நீ

கேளாயோ!! வெற்றிவேல் முருகா!!


கேட்பவரின் நெஞ்சில் கேந்திரமாய்

விளங்கி!! ஏற்றம் தரும் எதிர்வேலா!!


காத்திருப்போர்க்கு காவலாய் கதிர்வேலா!!

நீர் வர வேண்டும்!!

வேண்டும் வரங்கள் தர வேண்டும்!!


முகமெல்லாம் முருகா!! என முணுமுணுப்பதை

முத்தமிழ் வேந்தே நீ அறிவாய்!!


நினைவில் நீ கரைந்த நாள் முதல்

நினைவெல்லாம் நிமலன் நினைவே!!


உன் திருநாமத்தை திருவுடல் தீரும்

வரை தீரா வண்ணம் திருவருள்

செய்வாய்!! திருத்தணி வேந்தே!!


சரணம் சரணம் சரவணபவ ஓம் !!

சரணம் சரணம் சண்முகா சரணம் !!


                                   - தமிழ் குரங்கு


Comments


bottom of page