top of page

வறுமை

  • Writer: தமிழ் குரங்கு
    தமிழ் குரங்கு
  • Feb 22, 2024
  • 1 min read

Updated: Feb 29, 2024


வறுமை


தொப்புள் கொடி அருபட்டும் தொடரும்

தோழமை ஏழ்மை எனும் ஏமாற்றமே !!


வாய்ப்புகள் ஏராளம் என வாய்மொழிந்திட

வாய்ப்பது ஏனோ வறுமைதான்!!


காட்சிகள் காணும் கண்களோ

ஆட்சிகள் மாறினாலும் அரைவயிறுதான்!!


வாடாத வயிறு வேண்டும்

வசையறியா வாழ்க்கை வேண்டும்!!


தேடாத செல்வம் வேண்டும் !!

திசையறியா திருப்தி வேண்டும் என

எண்ணாத எண்ணங்கள் இல்லை!!

எடுத்து வைக்காத எடுப்புகள் இல்லை!!


ஏனோ!! ஏமாற்றமும் ஏளனமும்

ஏறித்தான் வருகுது !!

எல்லையில்லா ஏழைமக்கள் எதிர்பார்ப்பில்!!

                          

                                                                 - தமிழ் குரங்கு



Comments


bottom of page