அப்பா
- தமிழ் குரங்கு
- Feb 20, 2024
- 1 min read
Updated: Feb 29, 2024
அப்பா
அம்மா அவிழ்த்த உயிர்முடிப்பை
அழகாய் அள்ளி அரவணைக்கும்
ஆருயிர் அன்பன் அப்பா!!
தூண்கள் தூக்காத துயரத்தை
தன் துணைவிக்காக தூக்கி
நிற்பவர் நம் அப்பா!!
வான்பிளக்கும் வானிலையில் வற்றியதேகம்
வறண்டாலும் வயிறார வாழ்க்கைத்துணைகளுக்கு
வாரிவழங்கியது நம் அப்பா!!
நிமிராத தோணியில் நினைவலைகளை
நித்தமும் சுமந்து அயராத
பாணியில்
அத்தனையும் அள்ளிக்கொடுத்தவர் நம் அப்பா!!
உதிரத்தை உதிர்த்து உணர்வுகளுக்கு
உழைப்பே உன்பணி என ஏறாத
உயரங்களும் ஏறுவது
நம் அப்பா!!
வீடுகளில் விளக்கேறிய
விருந்தினர்தம் நாவறிய
விந்தை மனிதனாய்
பற்றாத பறவையாய் பறந்தோடும்
பகல்நிலவு நம் அப்பா!!
- தமிழ் குரங்கு
Comments